இந்திய தொழிலதிபர் உகாண்டாவில் கொலை

ஜோஹன்னஸ்பர்க் :உகாண்டாவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக்  கொல்லப்பட்டார். கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கிஸோரோவில், இந்தியாவைச் சேர்ந்த குண்டஜ் படேல்,24, என்பவர் இரும்பு கடை நடத்தி வந்தார்.

அங்கு, போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் எலியோடா குமிசாமு 21, கடந்த 27ம் தேதி படேல் கடைக்குள் புகுந்து அவர் மீது சரமாரியக சுட்டு விட்டு தப்பினார்

அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் வழியில்  படேல் உயிரிழந்தார்

உகண்டாவில் உள்ள இந்திய தூதரகத்தின் தலையீட்டிற்கு பின் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது இருப்பினும் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here