கோத்தா பாரு: பேராக்-கிளந்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு-மேற்கு விரைவுச் சாலையில் இன்று பிற்பகல் ஒரு காரும் லோரியும் மோதியதில் 40 வயதுடைய ஒரு பெண்ணும் ஒன்பது மாதக் குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து இன்னும் காவல்துறை விசாரணையில் உள்ளதால், பாதிக்கப்பட்ட அனைவரின் அடையாளங்களும் கண்டறியப்படவில்லை.









