ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்தநாள் : கூகுள் வாழ்த்து

ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்தநாளான இன்று, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘டூடுள்’ (Doodle) வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஸ்ரீதேவி, பின்னர் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் திரையுலகில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவி, 1976-ல் கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். நடிகை ஸ்ரீதேவிக்கு 2017-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here