ஆராவ், நவாமபர் 1 :
நவம்பர் மதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் PAS கட்சி 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் குறைந்தபட்சம் 40 இடங்களையாவது வெற்றி பெறுவதை PAS இலக்காகக் கொண்டுள்ளது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
“நாங்கள் 40 இடங்களை வெல்வதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், முடிந்தால் மேலும் அதிக தொகுதிகளிலும் வெற்றி பெற விரும்புகிறோம்,” என்று நேற்று இரவு ஆராவ்வில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் செயல்பாட்டு அறையைத் திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
மேலும் தமது கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற இடங்களை PAS தக்க வைத்துக் கொள்ளும் என்றும், பகாங் மற்றும் பெர்லிஸில் தாம் புதிதாக இடங்களை வெல்லும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் 15வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வை கூட்டணி இறுதி செய்துள்ளதாகவும், அவர்களின் பெயர்களை PN தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவிப்பார் என்றும் கூறினார்.
கடந்த 14வது பொதுத்தேர்தலில், PAS 18நாடாளுமன்ற இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.