‘என்னால் முடிந்த வரை ஊழலுக்கு எதிராக போராடுவேன்’ -டாக்டர் மகாதீர் உறுதி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2 :

“ஊழலுக்கு எதிராக தன்னால் முடிந்த வரை போராடுவேன்” என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதியளித்துள்ளார். இத்தககைய ஊழல் தேசத்தை அழித்துவிட்டதாகவும், அதனால் மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் வீடியோவில் தெரிவித்தார்.

ஊழல் தொடர்பான பேச்சுகளைக் கேட்டு வாக்காளர்கள் சலிப்படைகிறார்கள், சமீப ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட பல ஊழல்களை டாக்டர் மகாதீர் எடுத்துரைத்தார், கொள்ளையர்கள் நாட்டை மீண்டும் வழிநடத்துவதை மக்கள் விரும்பவில்லை என்றார்.

“உதாரணமாக, 1MDB , LCS ஆகிய மிகப்பெரிய ஊழல் திட்டங்களால் நாடு சின்னாபின்னமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். ஊழல்களால் நாட்டில் தனி நபர் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது.

அதாவது வாழ்க்கைச் செலவுஅதிகரிக்கும் போது, ​​ஊழல் மற்றும் பணவீக்க விகிதங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில், நாட்டின் கடன் அதிகரித்துக் கொண்டே இருந்தால், வணிகங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் இறுதியில் அவற்றின் விலைகளை உயர்த்தும் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here