தேசிய முன்னணி புதிய முகங்களை களமிறக்குவது இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் கட்சியின் மறுமலர்ச்சிக்குமே என்கிறார் ஜாஹிட்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2 :

15வது பொதுத் தேர்தலில் பல புதிய முகங்களை களமிறக்குவதற்கு தேசிய முன்னணி எடுத்த முடிவு, கட்சியின் மறுமலர்ச்சிக்காகவே என்று தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதையும், 40 வயதுக்குட்பட்டவர்களின் வாக்குகள் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதரக்காகவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது என்றார்.

மேலும் 39 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்களே வாக்காளர் பட்டியலில் 50 விழுக்காட்டினை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கூறினார்.

“எனவே, தேசிய முன்னணியின் புத்திரி மற்றும் இளைஞர் பிரிவுகள் சரியான பாதையில் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

“நாம் மாற வேண்டும், அரசியலில் யாரும் நிரந்தரனமானவர்கள் அல்ல, ஆனால் அனைவரும் முக்கியமானவர்களே, நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக மாறி அவர்களுக்கு வழிவிட வேண்டும்,” என்று இன்று புதன்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here