தாப்பா நாடாளுமன்றத்தில் 6 முனைப் போட்டி

தாப்பா நாடாளுமன்றம் மற்றும் அதன் இரண்டு சட்டமன்றங்களுக்கான வேட்புமனு தாக்கால் காலை 9 மணி துவங்கி 10 மணிவரை இங்குள்ள மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்றது. எந்த வித சலசலப்புமின்றி மனு தாக்கல் நடைபெற்ற வேளையில், தத்தம் ஆதரவாளர்கள் திரளாக மண்டபத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

தாப்பா நாடாளுமன்றத்தில் 6 முனைப்போட்டியாக 15 ஆவது பொதுத்தேர்தல் அமைந்துள்ளது. 4 ஆவது தவனையாக தேசிய முன்னணி சார்பாக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மீண்டும் களமிறங்குறார். இம்முறை நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவரும் வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார். தேசிய கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டத்தோ முஹம்மட் யாட்சின், வாரிசான் கட்சியிலிருந்து முஹம்மட் அக்பார் ஷேரிப், பெஜுவாங் கட்சியிலிருந்து மியோர் நோர் ஹைடிர் ஆகியோர் போட்டியிடும் வேளையில் சுயேட்சை வேட்பாளர்களாக கதிரவன் முருகன் ஆகியோரும் கலமிறங்குகின்றனர்.

தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட செண்டரியாங் சட்டமன்றத்திலும் 7 முனைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய முன்னணியைச் சார்ந்து சூங் சின் ஹெங், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து கெ அடிலானைச் சேர்ந்த அதிரா ஹானிம் பிந்தி ரசாலி, தேசிய கூட்டணியிலிருந்து முஹம்மட் யூனுஸ் பின் முஹம்மட் யூசோப், பெஜுவாங் கட்சியிலிருந்து முஹம்மட் அமின் பின் மான், வாரிசான் கட்சியிலிருந்து அஹ்மாட் தர்மிசி பின் முஹம்மட் கசாலி மற்றும் சுயேட்சை வேட்பாளராக அஸ்ருல் அஸ்மி, பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த தெராதாய் பாக் அரோம் ஆகியோர் கலமிறங்குகின்றனர்.

இதே நாடாளுமன்றத்தின் ஆயர் கூனிங் சட்டமன்றத்திலும் 5 முனைப் போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. தேசிய முன்னணியின் ஹாஜி இஷாம் ஷாருடின், பிஎஸ்எம் கட்சியிலிருந்து கே.எஸ். பவானி, அமானா கட்சியைச் சேர்ந்த முஹம்மட் நஸ்ரி ஹாஷிம், பாஸ் கட்சியிலிருந்து முஹம்மட் நோர் ஃபாரிட் மற்றும் பெஜுவாங் கட்சியிலிருந்து மசியா பிந்தி சலிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செய்திகள்& படங்கள் :ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here