கோத்தா பாருவில் தக்கியுடின் உட்பட ஆறு பேர் போட்டி

கோத்தா பாரு, நவம்பர் 5 :

கோத்தா பாருவின்நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் உட்பட ஆறு பேர் தமது வேட்ப்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

PAS பொதுச்செயலாளரான தக்கியுடின் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் கோத்தா பாரு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டாக்டர் ஹஃபிட்சா முஸ்தகிம் (PH-Amanah), டத்தோஸ்ரீ ரோஸ்மாடி இஸ்மாயில் (BN-Umno),அன்டி தான் @ அவாங் (PRM), டத்தோ டாக்டர் சீ மூசா சீ உமர் (Putra) மற்றும் சுயேச்சை வேட்பாளர் இசாட் புகாரி ஆகியோர் அத்தொகுதில் போட்டியிடுகின்றனர்.

14வது பொதுத் தேர்தலில் (GE14), தக்கியுடின் பாஸ் கட்சியின் கீழ் போட்டியிட்டு 5,869 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here