தேர்தல் அமலாக்க அதிகாரி மீது தாக்குதல் நடத்திய நேபாளிகள் இருவர் கைது

கோலாலம்பூர், நவம்பர் 8 :

தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழு உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு நேபாள நாட்டைச் சேர்ந்த ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 7) இரவு சுமார் 11.15 மணியளவில் நான்கு நேபாள நாட்டு ஆண்கள் குழுவின் சண்டையை நிறுத்த முயன்றபோது, குறித்த அதிகாரி தாக்கப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அசிஸ்ட் கமாம் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறுகையில், அதிகாரியும் அவரது குழுவினரும் அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ​​இங்குள்ள ஜாலான் SS2/63 இல் குறித்த குழுவினர் சண்டையில் ஈடுபட்டனர்.

“அப்போது பாதிக்கப்பட்ட அதிகாரி அவர்களின் சண்டையை நிறுத்த முயன்றபோது, ​​​​அதிகாரியை இரண்டு பேர் தாக்கினர். இதனால் அவர் காயமடைந்தார் என்றும் அவரது தகவல் தொடர்பு சாதனங்களும் சேதமடைந்தன,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) தொடர்பு கொண்டபோது கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்தோடு இருவரும் மேலதிக விசாரணைக்காக விளக்க மறியலில் வைக்கப்படுவார்கள் என்று ஏசிபி முகமட் ஃபக்ருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here