கோலாலம்பூர், நவம்பர் 9 :
இன்று புதன்கிழமை (நவம்பர் 9) பிற்பகல் பெய்த மழையைத் தொடர்ந்து, சிலாங்கூரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பண்டார் பொட்டானிக், பண்டார் புத்திரி, தாமான் செந்தோசா மற்றும் ஷா ஆலம் விரைவுச் சாலையின் (கிள்ளானை நோக்கி) சில பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளின் அடிப்படையில், பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக நீர்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் மாலை 4 மணியளவில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.