தலைநகரில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், நவமபர் 9 :

இங்குள்ள ஜாலான் சான் சோவ் லின் என்ற இடத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது, வெள்ளத்தில் மூழ்கிய இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவர், அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

பெரோடுவா ஆக்ஸியா காரின் ஓட்டுநரான ஒரு பெண் மற்றும் சுபாரு ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனத்தில் இருந்த ஆண் ஆகிய இருவரும், அவர்களின் வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கியபோது, அவர்களால் வாகனத்தைவிட்டு வெளியேற முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இரண்டு கார்களும் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருந்தன. கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL), குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் காவல்துறையினரால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று தலைநகரில் பெய்த கனமழைக்குப் பிறகு, கோலாலம்பூர் நகரின் இரண்டு பகுதிகளான முஹிபா மக்கள் வீட்டுத் திட்ட சுரங்கப்பாதை மற்றும் ஜாலான் கூச்சாய் லாமாவின் சில பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here