ஜார்ஜ் டவுன், நவம்பர் 10 :
15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசு நவம்பர் 18ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை நாள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக விடப்படுவதால், பொதுமக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள இலகுவாக இருக்கும் என்று நம்புவதாக பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவ் கூறினார்.
ஏற்கனவே சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் நவம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.