பெர்லிஸை வெல்வதற்கு தளபதியாக ஷாஹிதான் நியமனம்

பெரிகாத்தான்  நேஷனல் (பிஎன்) பொதுத் தேர்தலில் (ஜிஇ15)   வெற்றி பெற கூட்டணியின் “போர்த் தளபதியாக” முன்னாள் அம்னோ தலைவர் ஷாஹிதான் காசிமை நியமித்துள்ளது. பெர்லிஸ் பெர்சாட்டு தலைவர் அபு பக்கர் ஹம்சாவும், ஷாஹிதானின் திறமையில் நம்பிக்கை தெரிவித்தார். அவர் ஆழ்ந்த  அறிவையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார்  என்று அவர் கூறினார்.

முன்னாள் பெர்லிஸ் பிஎன் தேர்தல் இயக்குநராக தனது அனுபவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் பிஎன் வெற்றியைக் கொண்டுவருவதாக ஷாஹிதான் கூறினார். GE14 இல் பெர்லிஸில் BN கட்சி  வெற்றி பெற அனைத்து உத்திகளையும் வகுத்தவர் ஷாஹிதான் என்பது குறிப்பிடத்தக்கது

ஆராவ் தொகுதிக்கு மட்டும் அவர்  பிரச்சாரம் செய்வதில்லை, மற்ற தொகுதிகளில் உள்ள தனது சக PN சகாக்களுக்கும் உதவுவேன் என்று ஷாஹிதான் கூறினார்.ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு இடங்கள் உட்பட 15 மாநிலங்களில் 10 இடங்களையும், கங்கர் மற்றும் பதங் பெசாரில் தலா மூன்று இடங்களையும் கைப்பற்றுவதே தனது இலக்கு என்றார்.ஷாஹிதான் 1986, 1990, 2013 மற்றும் 2018 பொதுத் தேர்தல்களில் ஆராவ் தொகுதியில் வெற்றி பெற்றார்.

மக்களின் ஆதரவைப் பார்க்கும் போது  GE15 பொதுத் தேர்தலில் நிச்சயம் பெர்லிஸை  வெல்வோம் என்று PN தலைவர் முஹிடின் யாசின் கூறினார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here