GE15 பொதுத் தேர்தலில் PH கூட்டணி வெற்றி பெற்றால், பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி நிதியமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று அம்பாங்கிற்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் ரோட்ஸியா இஸ்மாயில், முன்மொழிந்துள்ளார். ரஃபிஸி நாட்டின் நிதியை நிர்வகிக்கத் தகுதி பெற்றவர் என்றும், மக்களின் நலன் மற்றும் தேவைகளை மனதில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவார் என்றும் கூறினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று PH தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆவார் மற்றும் ரஃபிஸி நிதியமைச்சராக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். GE15 இல் பாந்தன் தொகுதியில் ரஃபிஸி ஐந்து முனைப் போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.