கோலாலம்பூர், நவம்பர் 11 :
இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) காலை 8 மணி நிலவரப்படி, பகாங், பெர்லிஸ், சரவாக் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஆறுகள் அபாய அளவை எட்டியுள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்கள் பகாங்கில் உள்ள சுங்கை ரொம்பின், கங்காரில் சுங்கை பெர்லிஸ், பெர்லிஸ், சரவாக்கில் உள்ள லாங்ஜெகான் பாராம் மிரி, அத்துடன் சிலாங்கூரில் உள்ள சுங்கை லங்காட், கோலா லங்காட் மற்றும் பெக்கான் மேரு சுங்கை கிள்ளான் ஆகியவை அடங்குகின்றன.
சுங்கை மூவார் தாங்காக் மற்றும் சுங்கை பத்து பஹாட், ஜோகூரில் உள்ள பத்து பஹாட், சரவாக்கில் உள்ள பாடாங் ராஜாங் முகா, பாடாங் கிரியான் பெத்தாங் மற்றும் பாடாங் சுவாய் மிரி ஆகியவை எச்சரிக்கை நிலையில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நட்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சுங்கை பாத்தாஸ், சபாவில் உள்ள தேனோம் மற்றும் சுங்கை கபார் பெசார் பெட்டாலிங், கோலா சிலாங்கூரில் உள்ள சுங்கை சிலாங்கூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள கோலா லங்காட்டில் உள்ள சுங்கட் லங்காட் ஆகிய இடங்களிழும் நீர்மட்டம் எச்சரிக்கை அளவிலேயே உள்ளது.
இதற்கிடையில், தற்போது நாடு முழுவதும் ஏழு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, அதில் சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் தலா மூன்றும் கிளாந்தானில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக நட்மா தெரிவித்துள்ளது.