கார் மீது மரம் விழுந்ததில் கணவன், மனைவி படுகாயம்

பண்டார் பாரு, நவம்பர் 13 :

சுங்கை தெங்காஸில் உள்ள ஜாலான் தெராப் என்ற இடத்தில், அவர்கள் பயணித்த கார் மீது மரம் விழுந்ததில் ஒரு தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செர்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், துணை தீயணைப்புத் தலைவர், முகமட் ஃபைஸ் ஹெல்மி கூறுகையில், காலை 8.22 மணியளவில் ஒரு கார் மீது மரம் விழுந்ததாக அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

“கார் கம்போங் சுங்கை தெங்காஸ் திசையில் இருந்து கம்பங் டெராப் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, சம்பவ இடத்திற்கு வந்தபோது, பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்து, அந்த வழியைக் கடந்து சென்ற புரோத்தான் வீரா ஏரோபேக் கார் மீது விழுந்தது ” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற 51 வயது ஆடவரும், அவரது 58 வயது மனைவியும் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here