லஹாட் டத்துவில் போதைப்பொருள் கடத்தல் – ஆவணங்கள் இல்லாத பிலிப்பைனியர் கைது!

கோலாலம்பூர்:

சபாவின் லஹாட் டத்து மாவட்டம், கம்போங் பிசாங் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் நடந்த Op Tapis நடவடிக்கையின் போது, 30 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“அந்த நபரிடம் இருந்து RM18,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்ட் Jimmy Panyau இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், போலீசார் RM537 மற்றும் ஒரு கைப்பேசியையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், விசாரணையின் போது அந்த நபருக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமும் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு, 1952 இன் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B மற்றும் 39A(1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here