நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,491 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 13 :

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூர், மலாக்கா, சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் மொத்தம் 656 குடும்பங்களை சேர்ந்த 2,269 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,491 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்மந்தப்பட்ட ஏழு மாநிலங்களில் அதிகளவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாநிலமாக கிளாந்தான் (1,520 பேர்) உள்ளது, சிலாங்கூர் (693 பேர்) மற்றும் பினாங்கில் (234 பேர்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மலாக்காவில் (44 பேர்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  மாறாமல் இருக்கிறது. அதைத் தொடர்ந்து  ஜோகூர் (296 பேர்), கெடா (112 பேர்) மற்றும் பேராக்கில் (10 பேர்) என பதிவாகியுள்ளது.

“மொத்தமாக 26 வெள்ள நிவாரண மையங்கள் இன்னும் செயலில் உள்ளன, அதே நேரத்தில் ஒரு வெளியேற்ற மையம் இன்று காலை 8 மணிக்கு மூடப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் நட்மா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here