PRIMA வில் வீடு வாங்குபவர்களின் ஐந்து வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது

சிரம்பான்,  ரந்தாவில் உள்ள ரெசிடென்சி பந்தார் ஏகாரில் 742 PR1MA வீடுகளை வாங்குபவர்களின் ஐந்தாண்டு காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய  கல்லூரி உதவிப் பேராசிரியரான டே சிங் என் மார்கஸ் என்பவர்  இது தனது  நிதிச் சுமையைக் குறைக்கும் என்றார். இங்கு வீடு வாங்குபவரான தனலெட்சுமி என்பவர்  இன்னும் முடிக்கப்படாத ஒரு வீட்டிற்கு கிட்டத்தட்ட RM900 வீட்டுக் கடனாகசெலுத்த வேண்டியுள்ளது என்றார். போர்ட் டிக்சனில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் கூறுகையில்  இந்த திட்டத்தில்  சேரும் போது தனக்கு 35வயது  என்றும் தற்போது 41 வயதாகிறது இன்னும் திட்டம் முடிவடையாமல் உள்ளது என்று  வருத்தம் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும்  வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் தொடர்ந்து பல சந்திப்புகளை நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கென ஒரு டெலிகிராம் குழுவும் இருந்துள்ளது.

766  ஒரு அடுக்கு மற்றும் இரண்டு அடுக்கு மாடி வீடுகளை உள்ளடக்கிய இந்த திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டு 2019 ஜனவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  PR1MA கார்ப்பரேஷன் மலேசியாவின் பிரதிநிதி நூராஸ்லி ஹரோன், திட்டம் தற்போது 80.96% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், முகமட் பொதுத்துறை வீட்டு நிதி வாரியத்திடம் (LPPSA) மாதாந்திர தவணைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், வீடு தயாராக இல்லாததால் வாங்குபவர்கள் பெரும் சுமையை சந்தித்து வருகின்றனர் என்றும்  வீடு கட்டி முடிக்கப்பட்டது போல்  கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்.  இதனால் வாங்குபவர்கள் திட்டத்தின் நிறைவு விகிதத்தின் படி மட்டுமே பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here