மலேசியக் குடும்ப அரசாங்கம் – கொள்கை குறித்து ஓர் ஆய்வு

மலேசியக் குடும்பக் கொள்கை, அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்ட அளவு குறித்து 3 வாரங்களுக்குப் பரந்த நிலையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 6ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1,211 பேர் ஆய்வு அறிக்கையைப் பூர்த்திசெய்து ஆதரவு வழங்கினர்.

 குறிப்பாக தீபகற்ப மலேசியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வழக்க நிலையில் இந்த ஆய்வுக்காக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இனம், வயது, பொருளாதாரப் பின்புலம், கல்விப் பின்புலம், பாலினம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் பேசப்படும் தலைப்புகள் அல்லது விவகாரங்களைப் புரிந்துகொள்ளும் தன்மையை எளிதாக்க ஆய்வறிக்கை பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் சேர்க்கப்பட்ட 10 முதன்மை அம்சங்கள் பின்வருமாறு:
1. மலேசியக் குடும்ப அரசாங்க அடைவுநிலை
2. மலேசியக் குடும்பக் கோட்பாடு
3. பிரதமரின் கொள்கை, முன்னெடுப்புகள்
4. பொருளாதார நிர்வாகம்
5. அந்நிய முதலீடு
6. எதிர்கால அபிலாஷை
7. 2023 வரவுசெலவுத் திட்டம்
8. மகளிருக்கான 2023 வரவுசெலவுத் திட்டம்
9. இளையோருக்கான 2023 வரவுசெலவுத் திட்டம்
10. பட்டதாரிகளுக்கான 2023 வரவுசெலவுத் திட்டம்

இந்த ஆய்வறிக்கையின் மூலம் பெறப்பட்டுள்ள தர மதிப்பீட்டு தரவுகள் முதன்மை அம்சங்களின் வரிசைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here