சீன சமூகம் நியாயமான அரசாங்கக் கொள்கைகளை எதிர்பார்க்கிறது : MCA

சீன சமூகம் அரசாங்கக் கொள்கைகளில் நியாயத்தை மட்டுமே விரும்புகிறது என்று MCA பொதுச் செயலாளர் சோங் சின் வூன் கூறுகிறார்.  இன்று கைரி ஜமாலுதீன் தொகுத்து வழங்கிய முகநூல் குழு விவாதத்தின் போது அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் சீனர்கள் விரும்புவதாக கூறினார்.

அரசாங்கம் தங்களுக்கு உதவவில்லை என்ற கருத்து சீன சமூகத்திற்குள் இருப்பதாகக் கூறிய சோங், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.  வளர்ச்சி மற்றும் பொருளாதார விரிவாக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள்  நீக்குவது மற்றும்  நியாயமான வணிக சார்பு கொள்கைகளை சீனர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பொதுத்தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால், அரசியலிலும் அரசாங்கத்திலும் வெறும் 30% பிரதிநிதித்துவத்தை தாண்டி பெண்களுக்கு அதிகாரம் அளிப்போம் என்று பிஎன் கோலா லங்காட் வேட்பாளர் மோகனா முனியாண்டி ராமன் கூறினார். அரசியலின்  கொள்கைகளை உருவாக்கும் திட்டங்களில்  பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அவர்    சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த ரஃபிதா அஜீஸை  உதாரணமாக கூறினார்.

பொருளாதாரத்தில்  சிறப்படையவும், வணிகங்களை ஊக்குவிக்கவும்  பெண்களை ஒரு சம நிலையில் வைத்திருக்க  வேண்டும் என்று  மஇகா தலைவர் வனிதா கூறினார்.  BN வேட்பாளர்களான சி சிவராஜ் (படாங் செராய்), ஷைஃபுல் ஹசிசி ஜைனோல் அபிடின் (மெர்போக்), ரோசபில் அப்த் ரஹ்மான் (அராவ்), ஷாஹெல்மே யஹ்யா (புட்டாடன்), நிக்கோல் வோங் (டெப்ராவ்) மற்றும் ஷஹரில் ஹம்டன் (அலோர் காஜா) ஆகியோர்  இந்த குழுவில் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here