தெமர்லோ இந்திய மக்களின் மேம்பாடு உறுதிசெய்யப்படும் டத்தோஸ்ரீ சக்கார் வாக்குறுதி

பி.ராமமூர்த்தி, மெந்தகாப், நவ. 16-

இங்குள்ள தெமர்லோ இந்தியர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கு.விஜேந்திரன் தலைமையில் தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் இந்தியர்களின் எதிர்கால வாழ்க்கை சுபிட்சத்திற்கு இந்திய இளைஞர்களுக்கு வளமான கல்வி, பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை, ஏழை மக்களுக்கான வாங்கும் ங்க்தியிலான வீடுகள் போன்ற பொருளாதார மேம்பாட்டு புளூ பிரிண்ட் திட்டம் வெளியீட்டு விழா இங்குள்ள டேவான் ஸ்ரீ மெந்தகாப்பில் நவம்பர் 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சக்கார் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டியில் களமிறங்கும் டத்தோஸ்ரீ சக்கார் எதிர்க்கட்சி வசமிருக்கும் தெமர்லோ நராடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க இந்திய வாக்காளர்கள் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் இருப்பதாகக் கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here