நெகிரி செம்பிலானில் PH தனித்தே போட்டியிடும்: லோக்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு மாநிலத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளும் திறனும் அரசியல் பலமும் தங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பக்காத்தான் ஹரப்பான் துணைத் தலைவர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், 2018 முதல் 2023 வரை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியால் மாநிலத்தைத் தனித்து ஆள முடிந்தது என்றும் அவர் கூறினார்.

2020-ல் ஷெரட்டன் நகர்வு நடந்தபோது, ​​நெகிரி செம்பிலான் அப்படியே இருந்தது. கோவிட்-19 காலகட்டத்தில்கூட, எங்களிடம் 20 இடங்கள் மட்டுமே இருந்தபோதிலும், நாங்கள் தனித்து ஆட்சியைத் தொடர்ந்தோம். அரசாங்கம் கவிழவில்லை.

இது பிஎச் (PH) வலுவாக இருப்பதையும், எங்கள் நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வலுவாக இருப்பதையும் நிரூபிக்கிறது என்று இன்று செரம்பானில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.

முன்னதாக இன்று, டிஏபி (DAP) பொதுச்செயலாளரான லோக், அதே நிகழ்வில், நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி என்று தனது கட்சி நம்புவதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

டிஏபி தனது கருத்தை மந்திரி பெசார் அமினுதீன் ஹரூனிடம் தெரிவித்ததாகவும், கடந்த வாரம் ஜோகூரில் நடந்த பக்காத்தான் ஹரப்பான் மாநாட்டில் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தியதாகவும் அவர் கூறினார். சட்டமன்றத்தைக் கலைப்பது, மாநிலத்தை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க அனுமதிக்கும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமது ஹசனும் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here