லூரா பிலுட் மக்கள் தன்னை வெற்றிபெறச் செய்தால் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் டத்தோஸ்ரீ சந்திரா பலபேதா வாக்குறுதி

பி. ராமமூர்த்தி, பெந்தோங், நவ. 16-

பெந்தோங் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும் சமூகச் சேவையாளரும் பெந்தோங் ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ சந்திரா பலபேதா லூரா பிலுட் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார். கடந்த நவம்பர் 5ஆம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் டத்தோஸ்ரீ சந்திரா தொகுதியில் முழுமையாகக் களமிறங்கி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இத்தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கேட்டும் அறிந்தும் வரும் அவர், தம்மை இங்கு வெற்றி பெறச் செய்தால் இத்தொகுதி மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மக்களுள் ஒருவனாக இருந்து தீர்வு காண்பதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் பகாங்கில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுள் லூரா பிலுட் தொகுதியும் அடங்கும். பாதிக்கப்பட்ட மக்களுள் தானும் ஒருவன் என்பதால், இந்த வெள்ளக் காலத்தில் தன்னால் முடிந்த அனைத்து உதவி களையும் மக்களுக்குச் ஙெ்ய்ததாகக் குறிப்பிட்ட அவர், தொகுதி மக்கள் இதனை நன்கு அறிவர் என்றார்.

அதேவேளை இளம் தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முழுமைப் பெற்றவர்கள். அவர்களை நாம் ஓரங்கட்டக்கூடாது. இந்நிலையில் தொகுதி மக்கள் தனக்கு ஆதரவு நல்கி வெற்றிபெறச் செய்தால் இத்தொகுதியைப் பிரகாசமான ஒரு தொகுதியை உருமாற்றம் செய்திடப் போவதாக டத்தோஸ்ரீ சந்திரா பலபேதா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here