ஆறு மாநிலங்களிலுள்ள ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 17 :

நாட்டில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சரவாக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களிலுள்ள ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் தெரிவித்த்துள்ளது.

இன்று காலை 10.45 மணி நிலவரப்படி, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான publicinfobanjir.water.gov.my மூலம் பகிரப்பட்ட தரவுகளில் இதனை குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் மொத்தம் 15 ஆறுகள் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதாகவும், அதில் முதலிடத்தில் சிலாங்கூர் மாநிலம் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. அதில் பெக்கான் பாங்கி லாமா, உலு லங்காட்டில் உள்ள சுங்கை செமினியை உள்ளடக்கிய நிலையங்கள் அடங்குகின்றன; மேரு டவுனில் பிஞ்சாய் ஆறு, கிள்ளான்; தாமான் ஸ்ரீ மூடாவில் சுங்கை கிள்ளான், கிள்ளான்; மற்றும் தாமான் தேசா கெமுனிங்கில் சுங்கை ராசௌ ஆகிய நிலையங்களிலும் நீரின் அளவு எச்சரிக்கை மட்டத்தை தாண்டியுள்ளது.

மேலும் புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட், கோலா லங்காட்; கம்போங் சாலாக் திங்கி, செப்பாங்கில் சுங்கை லாபு; டெங்கில், செப்பாங்கில் உள்ள லங்காட் ஆறு ; மற்றும் சுங்கை லங்காட், ஜெண்டராம் ஹிலிர் என்பனவும் அடங்கும்.

இவைதவிர சரவாக்கில் உள்ள லாங் ஜெகன், லாங் தெரு மற்றும் மாருடி, மிரியில் உள்ளன; பகாங் (பாடாங் கூடாங் பாலம், பெராவில் ஆற்றை சேர்ப்பது); ஜோகூர் (லடாங் சாஹ், சிகாமாட்டில் உள்ள லெனிக் நதி); நெகிரி செம்பிலான் (பெக்கன் லிங்கியில் உள்ள லிங்கி ஆறு, போர்ட்டிக்சன்), மற்றும் மலாக்காவில் (மலாக்கா பிண்டாவில் உள்ளமலாக்கா ஆறு, அலோர் காஜா) என்பனவற்றிலும் நீரின் அளவு எச்சரிக்கை மட்டத்தை தாண்டியுள்ளது.

மேலும் அதன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், தற்போதைய வானிலை குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது

சமீபத்திய வெள்ள எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகள் மற்றும் ஆற்று நீர் நிலைகள் பற்றிய அறிவிப்புகளை publicinfobanjir.water.gov.my அல்லது Public infobanjir Twitter கணக்கில் பார்வையிடலாம் என்றும் அது தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here