அன்வாரின் யோசனைகள் தீர்ந்துவிட்டன என்கிறார் முஹிடின்

பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) நிதிநிலை அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பதில் அளித்த  முஹிடின் யாசின்,  அன்வார் இப்ராகிம் தேர்தல் பிரச்சாரத்திற்கான யோசனைகளை இழந்துவிட்டார்   என்று  கூறினார்.

PN க்கு மறைக்க எதுவும் இல்லை என்று வலியுறுத்திய கூட்டணியின் தலைவர், அதன் நிதிநிலை அறிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டு சட்டத்தின்படி சங்கங்களின் பதிவாளர் (RoS) க்கு அனுப்பப்பட்டதால் அவை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக உள்ளது என்று கூறினார்.   சட்டம் 1966 இன் கீழ், சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை  சமர்ப்பிக்க  வருடாந்திர பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும்  என்பது நியதியாக உள்ளது.

அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட அரசியல் அமைப்பாக, நாங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறோம்  என்று  கம்போங் ஜாவாவில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட பிறகு முஹிடின் கூறினார்.  ஒரு சென்  அல்லது  இரண்டு சென் எதுவாக இருந்தாலும் நாங்கள் தணிக்கை செய்கிறோம்.     அதை  யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால்  PKR, அவர்களின் கணக்குகளை தணிக்கை செய்கிறதா என கேள்வி எழுப்பினார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது  பல பில்லியன்    ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களால் பயனடைந்த பின்னர் PN பணக்கார கூட்டணியாக மாறியது   என்றும்  அப்போது பிரதமராக இருந்த பெர்சாத்து தலைவர் முஹிடின் சில கட்சிகளுக்கு டெண்டர் இல்லாமல் பல திட்டங்களை வழங்கினார் என்று பிகேஆர் தலைவரான அன்வார்  குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here