கைரி அம்னோவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்: சிவராசா குற்றச்சாட்டு

நாளை பாரிசான் நேஷனலின் சுங்கை பூலோ வேட்பாளர் கைரி ஜமாலுதீனுக்கு எதிராக வாக்களிக்குமாறு  பிகேஆரின் ஆர் சிவராசா,  மக்களை வலியுறுத்தினார்.   மற்றும் அம்னோவை நாட்டிற்கு  புற்றுநோய் என்று வர்ணித்தார்.

சனிக்கிழமை வாக்களிக்கும் அனைவரும்    புத்ராஜெயாவுக்கு  அம்னோ  மீண்டும்    வரக்கூடாது  எனபதில் உறுதியாக இருக்க வேண்டும்.  ஏனெனில்  அந்த கட்சி  நாட்டிற்கு  புற்றுநோயாக இருக்கிறது என்றார்.  புக்கிட் ரஹ்மான் புத்ராவில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கைரியை  நிராகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு வாக்களிப்பது, அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியை பிரதமராக்குவதற்கான வாக்குகளாக மாறும் என்றும் பேசியுள்ளார்.

மூன்று முறை சுங்கை பூலோ எம்.பி.யாக இருந்தவர் சிவராசா.  சில உடல்நலக்குறைவு  காரணங்களால் பொதுத் தேர்தலில் இருந்து  விலகினார். முன்னாள் PH கோட்டையாக இருந்த  இடத்தைத்  தக்கவைத்துக் கொள்ள முன்னாள் மஇகா பொதுச்செயலாளர் ஆர் ரமணன்  பணிக்கப்பட்டார்.

ரமணன் மற்றும் கைரியைத் தவிர, பெரிகாத்தன் நேஷனலின் கசாலி ஹாமின், பெஜுவாங்கின் அக்மல் யூசாஃப், பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் அஹ்மத் ஜுப்லிஸ் ஃபைசா மற்றும் இரண்டு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here