ஈப்போ, நவம்பர் 18 :
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 382.3வது கிலோமீட்டரில், ஸ்லிம் ரிவர் அருகே இன்று அதிகாலை 3 டிரெய்லர்கள் உட்பட ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 1 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், ஸ்லிம் ரிவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் மலேசிய மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“இடத்திற்கு வந்தபோது, மூன்று இரும்பு பொருட்கள் ஏற்றப்பட்ட டிரெய்லர்கள், ஒரு நிசான் எக்ஸ்-டிரெயில் மற்றும் புரோத்தோன் ஐரிஸ் ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
“இந்த விபத்தில் சிக்கியவர் சிறப்பு உபகரணங்கள் மற்றும் இரண்டு கிரேன்கள் மூலம் அகற்றப்பட்டார். 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








