தேர்தல் சுமூகமாக நடைபெற்று வருகிறது: தேர்தல் ஆணையம் தகவல்

இன்று 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணியாளர்கள்  தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்துள்ளனர்.  தேர்தல் பணியாளர்கள்  வாக்களிக்கும் பிரிவுகள் மற்றும் உபகரணங்களை ஏற்பாடு செய்தனர்,   மேலும் தேர்தல் ஆணைய (EC) விதிகளின்படி வாக்குப் பெட்டிகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தயாரித்தனர்.

ஆசிரியர்கள், கோலாலம்பூர் சிட்டி ஹால் ஊழியர்கள் மற்றும் போலீசார் உட்பட சுமார் 75 பேர் இங்குள்ள எட்டு பிரிவுகளிலும் பணியில் இருப்பார்கள், 4,911 வாக்காளர்களுக்கு சேவை செய்வார்கள் என்று வாக்குச் சாவடி ஒருங்கிணைப்பாளர் நுராசுரா ஹாஷிம் கூறினார்.

உடல்குறைபாடு உள்ளோர் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகளும் பிரத்யேக பாதைகளும் உள்ளன.  வாக்குப்பெட்டிகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காலை 6 மணிக்கு  வாக்குச் சாவடிக்கு கொண்டு வரப்பட்டது.  கோட்டா மெலகா தொகுதிக்கான 48 வாக்குச் சாவடி மையங்களில் ஒன்றான எஸ்.ஜே.கே (சி) பிங் மிங்கில் கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட அறையும்     ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோகூரில், தேர்தல்  ஆணைய  ஊழியர்கள் சிம்பாங் ரெங்காம் மாவட்ட நிர்வாக வளாகத்தில் காலை 9 மணிக்கே வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு மைய உபகரணங்களை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.  டெரெங்கானுவில், ஹெலிகாப்டர்களில்  தீவுகள் மற்றும் உள்பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு  பெட்டிகள் உட்பட வாக்குப்பதிவு உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

செட்டியூ மாவட்ட சபைக் களத்திலிருந்து, புலாவ் ரெடாங்கில் உள்ள வாக்குச் சாவடிக்கும், பெசுட்டுக்கு அருகிலுள்ள புலாவ் பெர்ஹென்டியனுக்கும், ஹுலு டுங்குனுக்கு அருகிலுள்ள பாசிர் ராஜாவுக்கும் வாக்குச் சீட்டுகள் வந்தன.

புத்ராஜெயாவில், தேர்தல் அதிகாரி ஷம்ஷுல் ஜோஹரி ஜைனால் மொக்தார் வாக்காளர்கள் கட்சி சின்னம் கொண்ட ஆடைகளை அணிந்து வர வேண்டாம் என்று நினைவூட்டினார், அவ்வாறு வருபவர்கள்  உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here