பூச்சோங்: அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் இயோ பீ யின் பூச்சோங் நாடாளுமன்றத்தில் 13,228 வாக்குகள் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளார்.
பீ யின் மொத்தம் 17,584 வாக்குகளைப் பெற்று, தேசிய முன்னனி (BN) வேட்பாளர் டத்தோஸ்ரீ சையத் இப்ராகிம் காதர் 4,356 வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளார். பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் செவ் ஜி கேங் (2,693) மற்றும் சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் (333). இரவு 9.30 மணி நிலவரப்படி, இந்தப் பகுதியில் மொத்தம் பதிவான 152,861 வாக்காளர்களில் மொத்தம் 24,966 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.