உணவகம் ஒன்றின் மேலாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குணசீலன் மற்றும் அவர் சகோதரி ஈஸ்வரி மீது குற்றச்சாட்டு

ஈப்போ: கடந்த வாரம் உணவக மேலாளர் ஒருவரை காயப்படுத்தியதற்காகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இரு உடன்பிறப்புக்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எஸ்.குணாசிலன்( 35), மற்றும் அவரது சகோதரி எஸ் ஈஸ்வரி (42), என்ற இருவர் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக நீதிபதிகள் நூர் மெலாத்தி டயானா அப்துல் வஹாப் மற்றும் கிர் நிஜாம் ஜெமாரி முன் வாசிக்கப்பட்டது.

இங்குள்ள ஜாலான் ராஜா பெரம்புவான் மஸ்வினில் உள்ள காலிசா உணவகத்தின் முன்னாள் ஊழியரான ஈஸ்வரி, அந்த உணவக மேலாளராக கே. சண்முக பிரியா (38) என்பவருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி நண்பகல் 3.10 மணியளவில் அவரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தனித்து வாழும் மூன்று குழந்தைகளின் தாயான ஈஸ்வரி மீதி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழி செய்கிறது.

ஈஸ்வரிக்கு 1,500 வெள்ளி ஜாமீனும் ஒரு ஆள் பிணையுடனும் அனுமதித்ததுடன், எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

துணை அரசு வழக்கறிஞர் அமலினா ஹருன் வழக்கு தொடர்ந்தார், வழக்கறிஞர்கள் மஹிந்தர்ஜித் சிங் மற்றும் முஹமட் கஜாலி ஆகியோர் ஈஸ்வரியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகினர்.

மேலும் வேலையில்லாதவரான குணசீலன், அதே இடத்தில், அதே தேதி மற்றும் அதே நேரத்தில் சண்முகப்பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506 ன் கீழ் அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் வழங்க வழிசெய்கிறது.

குணசீலனைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் முகமட் கஜாலி தனது கடைக்காரருக்கு குறைந்த ஜாமீனுக்காக மனு செய்தார், குணசீலன் தனது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட அத்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன் நீதிபதி நூர் மெலாத்தி குற்றம் சாட்டப்பட்ட குணசீலனுக்கு 2,000 வெள்ளி ஜாமீனுடன் ஒரு ஆள் பிணையையும் அனுமதித்ததுடன் வழக்கை நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் நோர் சியாஹிரா ஆசார் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here