மூன்று மாநிலங்களில் வெள்ள பாதிப்பு குறைந்து சபாவில் அதிகரித்துள்ளது

ஜோகூர், சிலாங்கூர் மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களில் இன்று வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதே நேரம் சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக  மாறியுள்ளது.

நேற்று  இரவு  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,153 பேர் வெளியேற்றப்பட்டனர்.  ஆனால் இன்று  ​​காலை 8 மணி நிலவரப்படி வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,092 ஆகக் குறைந்துள்ளதாக மாநில சிவில் பாதுகாப்புப் படை பேரிடர் மேலாண்மைக் குழு   தெரிவித்துள்ளது.  செபாங்கில் ஆறு, கோலா சிலாங்கூரில் நான்கு, சபாக் பெர்னாமில் இரண்டு, கோலா லங்காட் மற்றும் கிளாங்கில் தலா ஒன்று என பதினான்கு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

70 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. கிளந்தானில்   நேற்றிரவு 234 குடும்பங்களில் இருந்து 667 பேர் வெளியேற்றப்பட்ட  நிலையில்  தற்போது  401    என்ற எண்ணிக்கையாக  குறைந்துள்ளது.

சபாவில், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர்  மிஸ்ரான் பிசாரா கூறுகையில், நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையால்  சூக் மற்றும் நபவான் மாவட்டங்களில் பல பகுதிகள் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here