ஜோகூரில் 2 ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டிவிட்டது, 11 ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளன

குளுவாங், நவம்பர் 21 :

நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புத் திணைக்களத்தின் இணையத்தள அறிக்கையின்படி, ஜோகூர் மாநிலத்தில் உள்ள இரண்டு ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை கடந்த நிலையில், மேலும் 11 ஆறுகள் இன்று காலை எச்சரிக்கை அளவை எட்டியுள்ளன,

இன்று காலை 9.15 நிலவரப்படி பூலோ கசாப்பில் உள்ள சுங்கை மூவாரின் எச்சரிக்கை நீர்மட்டம் 8.53 மீட்டரருடன் ஒப்பிடும்போது அது 8.75 மீட்டரைத் தாண்டியுள்ளதுடன் கம்போங் அவாட், சிகாமாட்டில் உள்ள சுங்கை மூவாரின் அபாய நிலையான 19.35 மீட்டருடன் ஒப்பிடும்போது அது 19.67 மீட்டரை தாண்டியுள்ளது.

“செம்ப்ராங் அணை பத்து பகாட், பத்து 2 செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் ஆறு ; மச்சாப் அணை, குளுவாங்; பாரிட் தெங்கா மூவார் கிராமம்; பஞ்சோரில் உள்ள மூவார் ஆறு ஆகியவை எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளன.

“லாடாங் சாஹ் சிகாமட்டில் உள்ள லெனிக் ஆறு, தேலோக் ரிம்பாவில் உள்ள கேசாங் ஆறு, சென்டுக் ஆறு மற்றும் தாங்காக்கில் உள்ள கம்பூங் ஸ்ரீ மக்மூரில் உள்ள தாங்காக் ஆறு, கம்போங் பாசீரில் உள்ள கெலிலிங் ஆற்றுப் பள்ளம், ஜோகூர் பாரு மற்றும் கம்போங் லபோங்கில் உள்ள எண்டாவ் ஆறு, மெர்சிங் ஆகியவையும் எச்சரிக்கை நிலைகளை எட்டியது,” என்று அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை எதிர்வுகூறலில் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் , அதனால் இது இந்த மாத இறுதியில் பெரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்றும் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here