அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய ஆடவர் கைது

ஷா ஆலம்:சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய வீடியோவைத் தொடர்ந்து, சபாக் பெர்னாம், ஜாலான் ஆயர் மானிஸ்-சுங்கை பெசார் சந்திப்பில்,  உள்ளூர் நபரை போலீசார் துரத்திச் சென்று கைது செய்தனர்.

நவம்பர் 21 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் வரை இந்த வீடியோ வைரலாக பரவியதாகவும், சந்தேக நபர் நவம்பர் 22 ஆம் தேதி காவலில் வைக்கப்பட்டதாகவும் சபாக் பெர்னாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் அகஸ் சலீம் முகமது அலியாஸ் தெரிவித்தார்.

“சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் மார்பின் பாசிட்டிவ் இருந்தது மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் குற்றங்கள் தொடர்பான ஐந்து முந்தைய குற்றப் பதிவுகள் அவரிடம் உள்ளன. சந்தேக நபர் ஒரு வணிகக் குற்றத்திற்காகவும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும், அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அது பொலிஸாரின் தடுப்புப்பட்டியலில் எந்தப் பதிவும் இல்லை என்றும் அகுஸ் சலீம் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 186, சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42 (1) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 பிரிவு 15 (1) (ஏ) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரலான 17 வினாடி வீடியோ, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் ஆபத்தான யு-டர்ன் செய்து, போலீஸ் ரோந்துப் பணியில் இருந்து தப்பிக்க குறுக்கு வழியில் வேகமாகச் சென்றதைக் காட்டியது.-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here