செபராங் பிறையில் 48 மணி நேர நீர் விநியோகத் தடையால் 200,000 பேர் பாதிக்கப்பட்டனர்

இன்று தொடங்கும் 48 மணிநேர திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையால் செபராங் பிறையில் கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று பினாங்கு நீர் வழங்கல் நிறுவனம் (PBAPP) தெரிவித்துள்ளது. செபராங் பிறை உத்தாரா, தெங்கா மற்றும் செலாத்தான் ஆகிய பகுதிகள்  பாதிக்கப்பட்ட உள்ளன.   பிபிஏபிபி ஒரு அறிக்கையில், சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் குழாய்கள் மாற்றும் பணிகளுக்காக மூடப்பட்டது.

பாதிக்கப்படும் 197,851 நுகர்வோரில், 173,236 பேருக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், 24,615 பேருக்கு குறைந்த  அழுத்தத்தில்   நீர் விநியோகம்  இருக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.  விநியோக  சீர்குலைவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஆயர் ஈத்தாம் மற்றும் தீவில் உள்ள பிற நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக PBAPP தெரிவித்துள்ளது.

12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபட்ட பிறகு  மாநில அரசாங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தன்னார்வ தீயணைப்பு படையுடன் இணைந்து லோரி மூலம் நீர்  விநியோகம்  செயல்படுத்தப்படும்.   இதனால் 48 மணி நேரம் நீர் தடையின் போது பயன்படுத்த போதுமான நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகங்களுக்கு 04-2558255 என்ற எண்ணில் PBAPPஐத் தொடர்புகொள்ளுமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here