BN பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய கால அவகாசம் கோருகிறது

தேசிய முன்னணி தனது பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு மேலும் கால அவகாசம் கோருகிறது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி எதையும் முடிவு செய்வதற்கு முன் விவரங்களை சரிபார்க்க விரும்புகிறது என்று அவர் கூறினார். அதனால்தான் நாங்கள் இஸ்தானா நெகாராவை மாமன்னருடனான சந்திப்பை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் இங்கு தேசிய முன்னணியின் உச்சமன்ற  கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, திங்களன்று, கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளர்களை முன்மொழிவதற்கான காலக்கெடுவை ஒரு நாள் நீட்டித்துள்ளார்.

இருப்பினும், செவ்வாய் மாலை, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாட்டின் 10ஆவது பிரதமர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் PH 82 இடங்களை வென்றது. அதே நேரத்தில் PN 73 இடங்களை வென்றது, இரண்டுமே 222 இடங்களைக் கொண்ட மக்களவையில் 112 இடங்களை பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here