மலேசியக் கிண்ண காற்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது அரசியல் கட்சிக் கொடிகளுக்குத் தடை

கோலாலம்பூர், நவம்பர் 25 :

நாளை இரவு இங்குள்ள புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ள 2022 மலேசியக் கிண்ண காற்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகளை உடன் கொண்டுவரவோ, காட்டவோ ரசிகர்களுக்கு அனுமதிஇல்லை.

இந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் ஜோகூர் தாருல் தாசிம் மற்றும் சிலாங்கூர் எஃப்சி ஆகிய ஆணிகள் மோதுகின்றன.

அவ்வாறு தடையை மீறி அரசியல் கட்சிகளின் கொடிகளை கொண்டுவருபவர்கள் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசியல் தொடர்பான விஷயங்களை கொண்டாட அல்லது எதிர்ப்பு தெரிவிக்க இந்த விளையாட்டுத்திடல் பொருத்தமான இடம் அல்ல என்றும் மலேசிய காற்பந்து சங்கத்தின் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் டாலி வாஹிட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here