கோத்தா பாரு, நவம்பர் 27 :
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள வனப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது, சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்களின் நடவடிக்கை என்பவற்றை கண்காணிக்க மலேசிய ஆயுதப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிளாந்தான் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக, கிளாந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதியின்றி வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை இல்லாது ஒழிக்க இராணுவம் மாற்றும் சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்பை நாங்கள் (மாநில அரசு) முன்புகேட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) கோத்தா தாருல்னைமில் உள்ள கிளாந்தான் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மாநிலத்தில் வன ஆக்கிரமிப்பைக் கையாள்வதில் மாநில அரசின் முயற்சிகள் குறித்து முகமட் அதானன் ஹாசனின் (பாஸ்-கெளபோரன்) கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
காடுகளில் அந்நியர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்க மாநில அரசு, மாநில வனத்துறை துணைக் குழு மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எப்போதும் விவாதித்து வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.