ஜோகூர் சுல்தான் புதிய பிரதமரான அன்வாரை சந்தித்தார்

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் இன்று கோலாலம்பூரில் பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். இந்த விஷயம் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சந்திப்பின் பல புகைப்படங்களும் சமூக ஊடக தளத்தில் பதிவேற்றப்பட்டன.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தெரியவருகிறது. வியாழனன்று, சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் அன்வாரின் 10ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

75 வயதான அன்வார் வியாழன் அன்று இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here