பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கி சூடு – 20 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமைகள் அமைப்பு அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபைக்கு 53 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் 45 பேர் தேர்தல் மூலமாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 8 இடங்கள் பெண்கள், தொழில்நுட்ப வல்லுனர், மதகுருக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்படுகின்றன.

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக மீர்பூர் பிரிவின் 13 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெறவிருந்தது.

துப்பாக்கி சூடு – 20 பேர் பலி

ஆனால், தேர்தலை புறக்கணித்த மக்கள் அவாமி நடவடிக்கை குழு தலைமையில் ராவல்கட் நகரில் இருந்து முசாபர் நகருக்கு நேற்று பேரணியாக செல்ல முயற்சித்தனர்.

அப்போது, ராவல்கட் நகரின் முக்கிய சாலையில் பேரணி சென்றபோது பொதுமக்கள் மீது போலீசார், பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஜுன் 5ம் தேதி முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் போலீசார், ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பொதுமக்கள் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here