லிப்பீஸ், நவம்பர் 27 :
நேற்று மாலை இங்குள்ள மேலாவில் உள்ள கம்போங் செருனையில் மின்னல் தாக்கியதில் ஏழு கால்நடைகள் பலியாகியதால், கால்நடை வளர்ப்பாளரான அப் லா மட் இசா என்கிற முதியவருக்கு RM20,000 இழப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு ஏற்பட்ட கடுமையான மின்னலைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தபோது, இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக 69 வயதான அப் லா கூறினார்.
“இன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு, எனது மாட்டுத் தொழுவத்தின் வழியாகச் சென்ற ஒரு குடியிருப்பாளர் என்னை அழைத்து, எனது மாடுகள் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார்,” என்று அவர் கூறினார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக நான் மாடுகளை வளர்த்து வருகிறேன், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்றார் அவர்.