ரிங்கிட் மீண்டும் இந்த வாரம் 4.46 என்ற அளவை எட்ட வாய்ப்பு

புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதம் மற்றும் புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையால் சந்தை  உயர்வதாகவும்,  ரிங்கிட் மதிப்பு 4.46 அளவிற்கு மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புவதாக எஸ்பிஐ அசெட் மேனேஜ்மென்ட் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் இன்னெஸ் கூறினார். இது ரிங்கிட் உயர்விற்கு பயனளிக்கும்.  அரசாங்கத்தின் குறுகிய கால செயல்பாட்டுக்கான  வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரிப்பதில் நாடாளுமன்றம் முன்னுரிமை அளிக்கும். மேலும் ஒரு மாதத்தில்  பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும்  அவர்  கூறினார்.

மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் நவம்பர் 30 அன்று பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தை பற்றி பேச உள்ளார்.   வார இறுதியில் ரிங்கிட் இன்னும் வலுவாக வர்த்தகம் செய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் (GE15) மலேசியாவில் முதன்முறையாக      அமைந்த  தொங்கு நாடாளுமன்றம்   முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உலுக்கியது.

புதிய பிரதமராக  அன்வார் நியமனம் செய்யப்பட்டதன் மூலம்,  அமெரிக்க டாலருக்கு எதிராக  1.8 சதவீதம் அளவுக்கு   உயர்ந்து  ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது, இது அரசியல் நிச்சயமற்ற தன்மையை தளர்த்தியது.

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்   வியாழன் அன்று 4.5490/5565 ஆக உயர்ந்தது.கடந்த வாரம் வியாழன் அன்று சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.3091/3150 இலிருந்து 3.2573/2645 ஆக உயர்ந்தது, ஜப்பானிய யென்னுடன் ஒப்பிடும்போது 3.2581/2637 இலிருந்து 3.2118/2188 ஆக உயர்ந்தது மற்றும் யூரோவிற்கு எதிராக 4.671551/4620 இலிருந்து வலுவடைந்தது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here