உலகக் கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார்.

இதனால் போட்டி சமநிலையை எட்டியது. எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.   உலகக் கோப்பையில் பங்கேற்ற்றுள்ள 32 அணிகலும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் பிரான்ஸ் அணி 2 போட்டிகளில்  வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here