வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை தற்காலிகமாக மூடப்படும்

ஈப்போ உத்தாரா- ஈப்போ செலாத்தான் பகுதியின்     வடக்கு-தெற்கு விரைவுச்சாலை அவசரகால மீட்பு நடவடிக்கைகளை    எளிதாக்கும்  பணிகள் நடைபெற  இருப்பதால்  நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தற்காலிகமாக மூடப்படும்.  நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான PLUS Malaysia Bhd, கோல கங்சார், பினாங்கு மற்றும் பிற வடக்குப் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியது.

வடக்கு- கோல கங்சாரில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைப் பயனாளர்கள் ஈப்போ உத்தாரா சுங்கக் கட்டண சாலைக்கு  திருப்பி விடப்படுவார்கள். மேலும் FT240 ஜெலபாங்-அம்பாங் சேவை சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தெற்கே செல்லும் நெடுஞ்சாலைப் பயனர்கள் ஈப்போ செலாத்தான் சுங்க சாவடி வழியாக  NSE இல் மீண்டும் நுழைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சாலை மூடப்படும் போது PLUS பணியாளர்கள் வழங்கிய அனைத்து போக்குவரத்து  வழிகாட்டு பலகை  மற்றும் அறிவுறுத்தல்களை நெடுஞ்சாலை பயனர்கள் கடைபிடிக்குமாறு  வலியுறுத்தப்பட்டது. மேலும் தகவல் அல்லது உதவிக்கு வாகன ஓட்டிகள் PLUS நேரடி தொலைபேசி 1800880000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here