சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்படும் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமண புகைப்படங்கள்!

சென்னை, நவம்பர் 30:

நடிகர்கள் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சென்னையில் நவம்பர் 28ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில், நெருங்கிய நண்பர்களும், உறவினர்களுமே கலந்துகொண்டனர்.

நடிகர் கௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கௌதம் கார்த்தி தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இருவரும் சென்னையில் நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here