கோத்தா பாரு, நவம்பர் 30 :
செப்டம்பர் 30 ஆம் தேதி வரையான நிலவரப்படி, சுமார் RM28.5 மில்லியன் நீர் கட்டணம் அம்மாநிலத்தில் தண்ணீர் வழங்கும் நிறுவனமான Syarikat Air Kelantan Sdn Bhd (AKSB) க்கு செலுத்தப்படாது நிலுவையில் உள்ளதாக, இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொகையில் “RM18.4 மில்லியன் உள்நாட்டு நீர் நுகர்வோர் செலுத்த வேண்டிய தற்போதைய கடன் என்பது குறிப்பிடத்தக்கது” என்று, மாநில பணிகள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுக் குழுவின் தலைவர், டத்தோ அசாமி முகமட் நோர் கூறினார்.
செப்டம்பர் 30, 2022 வரை, கிளாந்தான் நுகர்வோர் AKSB நிறுவனத்திற்கு மொத்தமாக RM28,543,688 செலுத்த வேண்டும்.
இது 2021 இன் இறுதியில் (டிசம்பர் 31, 2021) செலுத்த வேண்டிய தொகை மொத்தம் RM33,212,268 மில்லியனாக இருந்தது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது,” என்று டத்தோ முகமட் அதான் கெச்சிக்கின் (BN-Bukit Bunga) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தண்ணீர் கட்டண வசூலை அதிகரிக்க AKSB நிறுவனம் மாவட்டங்கள் முழுவதும் வசூல் அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக இந்த ஆண்டு சுத்தமான குடிநீர் பிரச்னை இல்லாத பகுதிகளில் வங்கிகள் மற்றும் சேகரிப்பு முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வசூல்களை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.









