மலேசிய முஸ்லீம் இளைஞர் கிளப் (MMYC) ஏற்பாட்டில் மாபெரும் மீலாது துன் நபி ஊர்வலம் 11ஆவது ஆண்டாக மஸ்ஜித் இந்தியாவில் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் பைசால் தெரிவித்தார். இன்று நடைபெற்ற இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் பலர் 11ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மீலாது துன் நபி ஊர்வலத்தை மிகவும் விமர்சையாகவும் அதே வேளை இளையத் தலைமுறையினருக்கு இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகத்தின் நற்பண்புகள் குறித்தும் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.

5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாபெரும் மீலாது துன் நபி ஊர்வலம் வரும் 25.08.2026 அன்று காலை 10 மணிக்கு மஸ்ஜித் இந்தியாவில் இருந்து புறப்படும் என்று தெரிவித்தார். சமயத் தலைவர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரு திரளாக கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.























