கூச்சிங், டிசம்பர் 1 :
இதற்கு முந்தைய அரசாங்கத்தில் இருந்ததைப் போன்று, புதிய கூட்டரசு அமைச்சரவையிலும் நான்கு அமைச்சர் பதவிகளைத் தக்கவைக்க கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) விரும்புகிறது என்று, அதன் தலைவர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் தெரிவித்துள்ளார்.
“முந்தைய எண்ணிக்கையை (4 அமைச்சர்கள்) நாங்கள் தக்க வைத்துக் கொள்வோம். இது தொடர்பில் பிரதமரிட கோரிக்கை விடுத்துள்ளோம், இருப்பினும் அது பிரதமரின் கையிலேயே உள்ளது ” என்று சரவாக் முதலமைச்சர் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 1) மாநில சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
புதிய அமைச்சரவை அமைப்பது குறித்த தீவிர ஊகங்கள் அரசியல் கட்சிகளிடையே நிலவும் இந்த வேளையில், அபாங் ஜோஹாரியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.