இன்றிரவு ரொம்பினில் வெள்ளம் ஏற்படக்கூடும் – நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை

கோலாலம்பூர், டிசம்பர் 2:

இன்று இரவு 8 மணி முதல் பகாங்கின் ரொம்பினில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை எதிர்வு கூறியது.

நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கம்போங் கெடைக் பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் மழை முன்னறிவிப்புத் தகவல் மற்றும் தொடர்ச்சியான மழை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வெள்ளம் எதிர்பார்த்த நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம். அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில், எச்சரிக்கையாக இருக்குமாறும், அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் https://publicinfobanjir.water.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்; மற்றும் சமூக வலைத்தளங்களான Facebook @PublicInfoBanjir; அல்லது Twitter @JPS_InfoBanjir போன்றவற்றினூடாகவும் அறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here