ஜோகூர் பாரு, டிசம்பர் 3 :
இங்குள்ள ஸ்கூடாயில் உள்ள இரண்டு பலசரக்கு கடையில் வாடிக்கையாளரைப் போல வேடமிட்டு, கத்திகளைப் பயன்படுத்தி, கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
33 மற்றும் 39 வயதுடைய இரண்டு சகோதரர்கள் ஹெல்மெட் அணிந்து கடைக்குள் நுழைந்தனர் என்றும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது போல் நடித்ததாகவும், தங்கள் சட்டையில் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்ததாகவும், கவுண்டரில் இருந்த கடை ஊழியரை மிரட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர் என்றும் ஜோகூர் பாரு உத்தாரா காவல்துறையின் துணைத் தலைவர், கண்காணிப்பாளர் ஃபரிஸ் அம்மார் அப்துல்லா கூறினார்.
“குற்றத்தைச் செய்தபின் காவல்துறையினரால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இரண்டு சந்தேக நபர்களும் குளுவாங்கின் லாயாங் லாயாங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தின் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.